2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!
Oct 27, 2026, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 27, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவை முதன்மையான முதலீட்டு மையமாக கருதி முதலீடு செய்ய நெதர்லாந்து தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் என்று இந்திய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2026 இறுதிக்குள் அமலுக்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியா, நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு ஏற்கனவே வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது.

​​300-க்கும் மேற்பட்ட டச்சு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வரும் நிலையில் 2024-25 நிதியாண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான சரக்கு வர்த்தகம் 27.8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் சுமார் 53.3 பில்லியன் டாலர் திரட்டப்பட்ட முதலீட்டு வரவுகளுடன், நெதர்லாந்து இந்தியாவின் நான்காவது பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டு ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

இந்த வர்த்தக உறவுகளே தொழில்நுட்பம், விநியோகச் சங்கிலிகள், ஆராய்ச்சி மற்றும் தூய்மையான உற்பத்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைத் திறந்துள்ளன.

இந்நிலையில் நெதர்லாந்திற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவிற்கான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை முன்வைத்துள்ளார்.

100-க்கும் மேற்பட்ட இந்திய தொழில்துறை மற்றும் வணிகப் பிரதிநிதிகள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவன தலைவர்களுடன், ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பியூஷ் கோயல் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கவிருக்கும் பிரம்மாண்ட வாய்ப்புகளை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் துறைமுகத்திற்கு அதிகாரப் பூர்வமாக சென்று பார்வையிட்ட பியூஷ் கோயல், ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகமான ரோட்டர்டாம், ஐரோப்பிய சந்தைகளுக்குள் இந்தியப் பொருட்கள் நுழைவதற்கான முக்கிய மையமாகவும், இந்தியா-ஐரோப்பிய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் தளமாகவும் விளங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று நெதர்லாந்தில் எஞ்சியிருக்கும் ஒரே எஃகு ஆலை, டாடா ஸ்டீலுக்குச் சொந்தமான ஆலைதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகருக்கு அருகில் உள்ள ஐமுய்டன் (IJmuiden) பகுதியில் இந்த ஒருங்கிணைந்த டாடா ஸ்டீல் ஆலை அமைந்துள்ளது. இது ஐரோப்பாவின் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய எஃகு உற்பத்தி வசதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், பசுமை எஃகு (Green Steel) தயாரிப்புக்கு மாறவும், நெதர்லாந்து அரசு மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனம் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1924 முதல் எஃகு உற்பத்தி செய்து வரும் டாடாவின் நெதர்லாந்து ஆலை, ஆண்டுக்கு சுமார் 7 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்வதுடன் சுமார் 9,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது.

டாடா ஸ்டீல் நிறுவனம், தனது டச்சு செயல்பாடுகளின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டே, 2030-ஆம் ஆண்டுக்குள் ஹைட்ரஜன் அடிப்படையிலான பசுமை எஃகு உற்பத்தியை நோக்கி நகர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தின் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும், இந்தியாவின் திறமையான மனிதவளம், தொழில்முனைவோர் திறன் மற்றும் அளப்பரிய சந்தை வாய்ப்புகளையும் இணைப்பதன் மூலம் இரு நாடுகளும் பயனடையலாம் என்று கூறிய பியூஷ் கோயல், நெதர்லாந்து நிறுவனங்கள் இந்தியாவைத் தங்களின் முதன்மையான முதலீட்டு மையமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

கடல்சார் தளவாடங்கள் பசுமை ஆற்றல் செமிகண்டக்டர்கள், AI தொழில்நுட்பம், விண்வெளி, விவசாயம் மற்றும் துறைமுக மேம்பாடு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2026 இறுதிக்குள் இறுதி செய்யப்பட்டு, 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நெதர்லாந்து பயணத்தின் போது தெரிவித்துள்ளார்.

Tags: Minister of Commerce and Industry Piyush GoyalIndia-European Union Free Trade Agreementeconomic relationshipIndiaNetherlandEuropean UnionForeign Direct Investment
Share
Tweet
SendShare
Previous Post

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Related News

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies