ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது, புதிய பெயர் பலகையை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, வருகின்ற 6ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் ஆகஸ்ட் ஆறாம் தேதி இரவு 7:00 மணிக்கு, தர்பார் அரங்கத்தின் பெயர் மாற்றப்பட்டு, ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம்’ எனப் புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று, அரங்கத்தை திறந்து வைக்கிறார். இந்த அரங்கில் தான், அமைச்சர்கள், தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணரங்கத்தில் நடைபெறும், சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார்.
முன்னதாக ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி மற்றும் பழங்குடியின மக்களை நேரில் சந்திக்க முதுமலைக்கு
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.