மத்திய தகவல் தொலைதொடர்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தபால் துறையில் வேலைவாய்ப்பு உள்ளதாக தபால் துறை தெரிவிக்கபட்டுள்ளது.
அந்த வகையில் 2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு தேவையான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டுள்ளது.
பணி விவரம்,
பணி : Gramin Dak Sevak (GDS), BRANCH POSTMASTER (BPM)
பணி: Assistant Branch Postmaster (ABPM)/Dak Sevaks)
இந்திய தபால் துறையில் பிபிஎம் (Branch Post Master/BBM) பிரிவு மற்றும் உதவி கிளை தபால் காரர் (Assistant Branch Postmaster/ABPM) பிரிவுகளில் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் மொத்தம் 30,041 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் உள்ளன என்று தெரியவந்துள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பணி அமர்த்தப்படுபவர்கள். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 23.8.2023 தேதியின் படி18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
இதில் ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வயது முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு. வயது வரம்பு என்பது 11.06.2023-ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்திருந்தால் மட்டும் போதும். விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண் வாரியாக தேர்வுச் செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள். இதில் எழுத்து தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள் : 23.8.2023 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.