அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் சச்சரி கிர்கோர்ன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் வைபவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது.
சமீப காலமாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இந்தியர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தனேஜா (வயது 45) தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கு முன் அந்தப் பொறுப்பில் உள்ள சச்சரி கிர்கோர்ன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் வைபவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்ற இவர், கணக்கியல் துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். மேலும் இவர் தொழில்நுட்பம், சில்லரை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு தொடர்பான பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் உயர்பொறுப்புக்களை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.