6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தல் செப்டம்பர் 5-ல் நடக்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
ஜார்க்கண்டின் தும்ரி, மேற்கு வங்கத்தின் துப்குரி(தனிதொகுதி) கேரளத்தின் புதுப்பள்ளி, உத்தரபிரதேசத்தின் கோசி, உத்தரகாண்டின் பகேஷ்வர், திரிபுராவில் போசஷாநகர் மற்றும் தன்புர் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 5ல் தேர்தல், என்றும், 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் அண்மையில் உயிரிழந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் புதுப்பள்ளி தொகுதியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.