இந்தியா – மலேசியா மோதிக்கொள்ளும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டியைச் சென்னையில் நடைபெற உள்ள நிலையில், போட்டியைப் பார்வையிட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சென்னை வந்தார்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று அரையிறுதிப் போட்டி நடந்தது. அரையிறுதியில் இருந்து இந்தியா மற்றும் மலேசிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இறுதிப்போட்டி இன்று சென்னை இராதாகிருஷ்னன் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் போட்டியைக் காண மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் அமைச்சர் அனுராக் தாக்கூர் சென்னை வந்தார். அவரை சென்னை விமானநிலையத்தில் ஹாக்கி இந்தியக் குழுமத் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் திலீப் டிர்கி மற்றும் ஹாக்கி இந்தியக் குழுமப் பொதுச்செயலாளர் போலாநாத் சிங் ஆகியோர் வரவேற்றனர்.
Hockey India President Padma Shri Dr. Dilip Tirkey and Hockey India Secretary General Shri Bhola Nath Singh welcomed Hon’ble Union Minister for Information & Broadcasting and Youth Affairs & Sports, Government of India, Shri Anurag Thakur at Chennai Airport this morning. The… pic.twitter.com/xMiMGSZTHM
— Hockey India (@TheHockeyIndia) August 12, 2023