கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத, நில ஆக்கிரமிப்புப் புகார்களை எதிர்கொள்ளும் மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது X (ட்விட்டர்) பதிவில்,
இன்று மாலை, என் மன் என் மக்கள் பயணம், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான, நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரியில் தொடங்கி, பூலோக வைகுண்டமும், பூலோக கைலாசமும் ஆலயங்களாக எழுந்துள்ள புண்ணிய திருத்தலமான ஶ்ரீ வைகுண்டத்தில் நிறைவு பெற்றது.
அருகிலுள்ள ஆதிச்சநல்லூர், 3500 ஆண்டுகள் பழமையானது என்றும், உலக நாகரிகம் தோன்றிய முதல் இடமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க கடந்த வாரம் அடிக்கல் நாட்டினார். தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 350 க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்பங்கள் பிரதமர் அவர்களின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளன.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத, நில ஆக்கிரமிப்புப் புகார்களை எதிர்கொள்ளும் மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் புறக்கணித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாட்சியைத் தொடரச் செய்வார்கள் என்பது, இன்று… pic.twitter.com/QvjLhM3gca
— K.Annamalai (@annamalai_k) August 13, 2023
மோடியின் முகவரி : ஶ்ரீ வைகுண்டம்
பிரதம மந்திரி வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் பலனடைந்த திருமதி ஆவுடையம்மாள், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பலனடைந்த திருமதி பத்திரகாளி, சுவாநிதி திட்டத்தில் பலனடைந்த திருமதி சரண்யா, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பலனடைந்த திருமதி சகாயராணி, மகளிர் சுய உதவிக் குழு திட்டத்தின் மூலம் பலனடைந்த கருவாடு வியாபாரம் செய்யும் திருமதி ஹெலன். இவர்கள்தான் பாரதப் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரி.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத, நில ஆக்கிரமிப்புப் புகார்களை எதிர்கொள்ளும் மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் புறக்கணித்து, பாரதப் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியைத் தொடரச் செய்வார்கள் என்பது, இன்று நடைபயணத்தில் பெரும் திரளாகப் பங்கேற்ற மக்களின் அன்பில் வெளிப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.