பாரத நாடு சுதந்திரம் பெற்று பொன் விழா ஆண்டு சுதந்திர நாளன்று, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள தொழில் முனைவோர் தம்பதிகள் என்ற அடிப்படையில் 1800 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டம் ஜாலா கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சுனிதா மற்றும் அவரது கணவர் ரவுதாலா ஆகிய இருவருக்கும், செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுப்பற்றி அவர் கூறும் போது, “நான் என்னுடைய விவசாய நிலத்தில் ஆப்பிள் சாகுபடி செய்து வயது வருகிறேன். என்னைப் போல் ஆப்பிள் சாகுபடி செய்யும் பெண்களை 162 பேரை ஒன்றிணைத்து விவசாய கூட்டுறவு சங்கம் தொடங்கினேன்.
அந்த சங்கத்தின் மூலம் இயற்கை முறையில் ஆப்பிள் ஜாம் செய்ய முனைந்தோம். அந்த ஆப்பிள் ஜாம் உத்தராகண்ட் வெகு வரவேற்பு பெற்றது. அந்த ஆப்பிள் ஜாமை நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி இருந்தேன். அந்த பொருளுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுப்பதற்கான நடவடிக்கை செய்ய ஆவணம் செய்கிறேன். என பிரதமர் மோடியிடம் இருந்து பதில் வந்தது.
இந்நிலையில், மேலும் என்னை ஊக்கப்படுத்தும் விதமாக டெல்லி செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின பெருவிழா நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.