இந்தியா முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அலுவலகங்கள், தொழில் கூடங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் எனவும், அதை செல்பி எடுத்து https://harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இந்நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கொடியுடன் பேரணி நடத்தினர்.
இந்த நிலையில், டில்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசியக்கொடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்றினார்.
As the #HarGharTiranga campaign called for by PM @narendramodi Ji is underway it is my earnest appeal to the people of India to hoist the National Flag at their homes and upload selfies on https://t.co/gWYNL03fGv.
Also please encourage fellow citizens to do the same.Cherishing… pic.twitter.com/HwCNvuofad
— Amit Shah (@AmitShah) August 14, 2023
இது குறித்து தனது x (ட்விட்டர்) பதிவில்,
இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றும் வகையில், இன்று தில்லியில் உள்ள தமது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றியதாகவும், இல்லந்தோறும் மூவர்ணக் கொடி பிரச்சாரத்தில் கலந்து கொண்டதற்காக பெறப்பட்ட சான்றிதழையும் பகிர்ந்துள்ளார்.