இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சமூக வலைத்தளமான எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் கோல்டன் டிக் இழந்தது.
இந்தியச் சுதந்திர தினத்தை அமிர்த பெருவிழாவாகக் கொண்டாடும் இந்த சமயத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் தேசியக் கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதனை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் மூவர்ணக் கொடியை முகப்பு படமாக மாற்றியது.
முகப்பு படத்தை மாற்றிய சில மணித்துளிகளிலேயே தனது கோல்டன் டிக்கை இழந்தது. கோல்டன் டிக் என்பது ஒரு சரிபார்ப்பு குறியாகும், போலிக் கணக்குகளை அடையாளப் படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. அந்த கோல்டன் டிக் குறியீட்டைத் தான் பிசிசி இடமிருந்து நீக்கி உள்ளது எக்ஸ்.