முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த சுதந்திர தின விழாவில் யானைகள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியது கண்காெள்ளாக் காட்சியாக இருந்தது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் தெப்பக்காடு யானைகள் முகாம் அமைந்திருக்கிறது. இம்முகாமில் 77-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. முகாமில் வளர்ப்பு யானைகளை வரிசையாக நிறுத்தி வைத்து, அதன் மீது யானைப் பாகன் தேசியக் கொடியை ஏந்தியவாறு அமர்ந்திருந்தார்.
முதுமலை துணை இயக்குனர் வித்யா தேசிய கொடியேற்றினார். வன ஊழியர்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை தூக்கி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததாக, பார்வையாளர்கள் தெரிவித்தனர்.