பொருளாதாரப் பங்குசந்தையில் 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கி குழுமத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமிய காண்டி கோஷ் இன்று தொலைக்காட்சிக்கு அளித்த பெட்டியில், “இந்தியா இன்னும் 4 ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தை எட்டும். தற்போது அமெரிக்கா , சீனா , ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் நான்கு இடத்தில் இருக்கின்றன. இந்தியா 5-வது இடத்தில் உள்ளது” என்றார்.
2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற போது இந்தியா பொருளாதாரத்தில் 10-வது பெரிய நாடக இருந்தது . தற்போது 2022- ம் ஆண்டில் இந்தியா ஐக்கிய நாடுகளை பின்னுக்கு தள்ளி 5-வது இடத்திற்கு முன்னேறியது
மேலும், 2027-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா , சீனாவுக்கு அடுத்த இடத்தில் (3-வது) இந்தியா இருக்கும். இது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நம்பகத்தன்மைக்கு ஒரு மிக பெரிய சாதனையாக அமையும். பிரதமர் கூறியதை போல் 2047-ம் ஆண்டு இந்தியா நிச்சயம் வல்லரசான நாடக திகழும்” என்றார்.