மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி - முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!
Jun 25, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 9, 2026, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்கத்தின் முதல் பாஜ.க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதன்மூலம் 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழா மேடைக்கு திறந்த வாகனத்தில் அணிவகுத்து வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து முழக்கங்களுடன் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு, விழா மேடையில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, பாஜகவின் மிக மூத்த தொண்டர்களில் ஒருவரான 98 வயதாகும் மக்னலால் சர்க்காரை பிரதமர் மோடி ஆரத்தழுவி, காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இதையடுத்து மேற்குவங்கத்தின் முதல் பாஜக முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, பா.ஜ.க மூத்த தலைவர்கள் திலிப் கோஷ், அக்னி மித்ரா பால், அசோக் கிர்தானியா, சுதிராம் டூடு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரி மற்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பாஜகவுக்கு இமாலய வெற்றி அளித்த மேற்குவங்க மக்களுக்கு பிரதமர் மோடி விழா மேடையிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Tags: west bengal assembly election 2026west bengal election 2026west bengal assembly election newsPM Modiamith shahSuvendu Adhikariwest bengal assembly election
ShareTweetSendShare
Previous Post

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

Next Post

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி – நேரில் நலம் விசாரித்தார் மோகன் பாகவத்!

Related News

இரு நாட்களாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 300 அரசுப்பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

டாகடர் ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு – கட்டியணைத்து கதறி அழுத பாமக நிறுவனர்!

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கண்டனம்!

அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன அடிமைகளா? – நயினார் நாகேந்திரன்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதம் – அதிமுக கவுன்சிலர்கள் மீது பேப்பர் வீச்சு!

பேசினாலும் பிரச்சினை, பேசாம இருந்தாலும் பிரச்சினை – நடிகர் ரஜினிகாந்த் ஓப்ன் டாக்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன் – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புகழாரம்

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

நிறைமாத கர்ப்பிணியின் இருக்கைக்கு சென்று பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் – பிரதமர் மோடி

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies