டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,
“மாநகரப் பேருந்து சேவைகளை மேம்படுத்தும் “பிரதம மந்திரி இ-பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.57,613 கோடி செலவிடப்படும். நாடு முழுவதும் சுமார் 10,000 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
இத்திட்டம் 3 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்கள், பேருந்து சேவைகள் இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் மின்சார பஸ் திட்டத்தால் 45 ஆயிரம் பேர் இருந்து 55 ஆயிரம் பேர் வரை வேலை வாய்ப்புகள் பெறுவார்கள்” எனக் கூறினார்.