இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, ஐக்கிய அரசு அமீரகமான துபாயில் உள்ள புர்ஜ் கலாஃபா, இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஜொலித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
உலகின் மிக உயர்ந்த கட்டடமாக புர்ஜ் கலீஃபா கருதப்படுகிறது. 163 மாடிகளைக் கொண்ட இக்கட்டடம், 828 மீட்டர் உயரம் கொண்டது. 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இக்கட்டத்தின் கட்டுமானப் பணிகள், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து, 2010-ம் ஆண்டுதான் நிறைவடைந்தது. இக்கட்டத்தில் விளம்பரம் செய்வதற்குப் பல கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
Indian flag at the Burj Khalifa with the national anthem.
A goosebumps moment! 🇮🇳 pic.twitter.com/K6sxXODZhI
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 15, 2023
இது ஒருபுறம் இருக்க, இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் புர்ஜ் கலீஃபா, இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிரச் செய்யப்படும். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு மூவர்ணத்தில் ஒளிரச் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, நேற்றும் புர்ஜ் கலீஃபா, இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தில் ஜொலித்தது. மேலும், பின்னணியில் இந்திய தேசியகீதமும் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது எக்ஸ் சமூக வலைதளப் பயனாளர் ஒருவர், புர்ஜ் கலீஃபாவில் தேசிய கீதத்துடன் இந்தியக் கொடி மிளிர்கிறது. மெய்சிலிர்க்க வைக்கும் தருணம் இது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.