தமிழக சட்டப்பேரவவை தேரதல் - இபிஎஸ், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்!
Sep 8, 2026, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சட்டப்பேரவவை தேரதல் – இபிஎஸ், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 23, 2026, 10:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அனைவரும் கட்டாயம் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வருகை தந்து வாக்களித்தார். முதலமைச்சரை தொடர்ந்து அவரது மனைவி துர்கா மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை போன்று அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில், எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், தேர்தலில் வாக்களிக்க பெரும் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ஜனநாயக திருவிழாவில் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக சட்டப்பேரவையில் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்க தன்னை போன்றவர்களுக்காக வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். ஜனநாயக முறையில் வாக்களித்தால் சாதாரண குடிமக்கள் உயர் பதவிக்கு வரலாம் என்பதற்கு தாமே சான்று என கூறினார்.

சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக தலைவர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று தமிழகம் சுதந்திரம் பெறுவதாக உணர்கிறேன் என குறிப்பிட்டார். மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மாநில துணை தலைவரும், நடிகையுமான குஷ்பு, தனது கணவர் சுந்தர் சி மற்றும் மகளுடன் சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மக்கள் என்டிஏ கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பள்ளியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்டிஏ கூட்டணியின் வெற்றியை மக்கள் உறுதி செய்வார்கள் என்று நம்புவதாகவும் வளர்ச்சியான மற்றும் பாதுகாப்பான தமிழகம் உருவாக வேண்டும் என்று மக்கள் நினைப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் வாழும் நமது சொந்தங்களில் சிலர் ஆர்வமாக வாக்களித்து வருவதாகவும், சிலரால் வரமுடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். காவல்துறையினருக்கு போன்று தபால் வாக்கு வாய்ப்பை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஜனநாயக நாட்டில் நமக்கு இருக்கும் கடைசி வலிமை, கருவி என்பது வாக்கு தான் எனக்கூறிய அவர், வாக்கு செலுத்தாமல் இருப்பதும் ஒருவித தேச விரோத குற்றம் என தெரிவித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதியுடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.

 

 

Tags: 2026 tamil nadu assembly nadu election trendstamil nadu election updateseps votingl murugan votingTamil Nadu Assembly elections.tamil nadu assembly elections 2026Assembly Elections Tamil Nadutamil nadu assembly election 2026
Share
Tweet
SendShare
Previous Post

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்!

Next Post

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37. 56 % வாக்குப்பதிவு!

Related News

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies