இந்தியா – அயர்லாந்து டி20 கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. நடந்த முதல் போட்டியிலேயே இந்தியா வெற்றி பெற்றது.
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. நேற்று முதல் போட்டித் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அயர்லாந்து அணி வீரர்கள் பால்பிரணி(4), லார்கன் (0), காரீ டெக்டர் (9), ஜார்ஜ் டக்ரேல் (1), கேப்டன் பால் ஸ்டீலிங் (11), மார்க் அடைர் (16), இராமகிய எவருமே நிலைக்கவில்லை. 16வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் கார்டிஷ் கேம்பல். 17 வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடிக்க ஒரே ஓவரில் 15 ரன் அடித்தனர்.
கடைசி ஓவரில் மெக்கரத்தி ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடிக்க, அயர்லாந்து அணி 7 விக்கெட்டுக்கு 139 ரன் எடுத்தது.
இந்திய அணிக்கு டார்கெட்டாக 140 இருக்க, தொடக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெயஸ்வால், ருதுராஜ் இறங்கினார்கள். 6.5 ஓவரில் 47/2 என்ற அடிப்படையில் இந்திய அணி இருந்த போது, மழையால் போட்டி கைவிடப்பட்டது.
பின்னர், “டக் வொர்த் லிவிஸ்” முறையில் இந்திய அணி 45 ரன் எடுத்திருக்க வேண்டும். ஆனால் 2 ரன் கூடுதலாக எடுத்ததால் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பும்ரா காயமடைந்து ஓய்வில் இருந்தார். சுமார் ஓராண்டுக்குப் பிறகு நேற்று விளையாடிய பும்ரா, களமிறங்கிய முதல் போட்டியிலேயே சர்வதேச டி20 போட்டியில் முதல் ஓவரில் 2 விக்கெட் எடுத்த இந்தியப் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
அந்தப் பட்டியலில் அஸ்வின் (2006,இலங்கை), புவனேஸ்வர் (2022, ஆப்கனிஸ்தான்), ஹார்திக் பாண்டியா (2023, மேற்கு இந்தியத் தீவுகள்), இப்போது அந்தப் பட்டியலில் பும்ராவும் இடம் பிடித்தார்.
இரண்டாவதுப் போட்டி இன்று (19.08.2023) நடக்கவிருக்கிறது.