இராஜகோபால தொண்டைமானிற்கு நினைவிடம் அமைக்க ஊழல் திமுக அரசு 2 ஏக்கர் நிலம் கொடுக்க மறுக்கிறது- அண்ணாமலை
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராஜகோபால தொண்டைமானிற்கு நினைவிடம் அமைக்க ஊழல் திமுக அரசு 2 ஏக்கர் நிலம் கொடுக்க மறுக்கிறது- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Aug 19, 2023, 03:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

100 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவரின் மணிமண்டபத்திற்கு,
ஊழல் திமுக அரசு 2 ஏக்கர் நிலம் கொடுக்க மறுக்கிறது என பாஜக மாநில் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னராக புதுக்கோட்டை நகரின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய ஐயா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது நாம் அறிந்ததே. புதுக்கோட்டை மக்களின் நலனுக்காக, விவசாயம், போக்குவரத்து, நீர்ப்பாசனம் என பல்வேறு துறைகளில் வசதிகளை ஏற்படுத்தித் தந்தவர் மன்னர் ராஜகோபால தொண்டைமான்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களது கோரிக்கையை ஏற்று இந்தியக் குடியரசுடன் இணைக்க ஒப்புக்கொண்ட மன்னர் ராஜகோபால தொண்டைமான், அவரது அரச கருவூலத்திலிருந்து, 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை நாட்டுக்கு வழங்கியவர்.

1974 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அமைக்க 100 ஏக்கர் அளவுள்ள நிலத்தையும், தன் சொந்த அரண்மனையையும் வழங்கிய பெருமைக்குரியவர்.

அத்தகைய பெருமை வாய்ந்த மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களுக்கு நினைவிடம் அமைக்க, ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் அவர் தானமாகக் கொடுத்த 100 ஏக்கர் நிலத்திலிருந்து, இரண்டு ஏக்கர் நிலத்தை, நினைவிடம் அமைக்க வழங்க வேண்டும் என்ற மன்னர் குடும்பத்தின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்காமல், வெறும் 35 சென்ட் நிலம் மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நாட்டுக்காகவும், புதுக்கோட்டை மக்களுக்காகவும் தனது
உடைமைகள் அனைத்தையும் கொடுத்த மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களது வரலாற்றை, இன்னும் பல தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

மன்னர் தானமாகக் கொடுத்த 100 ஏக்கர் நிலத்தில் இருந்து, அவருக்கு நினைவிடம் அமைக்க 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்வதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்பது தெரியவில்லை.

உடனடியாக, தமிழக அரசு தனது வீண் பிடிவாதத்தை விட்டு விட்டு, தமிழகத்தின் பெருமை மிகுந்த மன்னர்களில் ஒருவரான மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களுக்கு நினைவிடம் அமைக்க, ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் நிலத்தில், 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும், மன்னர் நினைவிடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags: k annamalaibjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா அயர்லாந்து டி20: இந்திய அணி வெற்றி.

Next Post

டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்றுகனமழை.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies