டெல்லியை சுற்றிவுள்ளப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில், அதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில், டெல்லியை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்தது. இந்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து பதிக்கப்பட்டது.
இது பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் டெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 12 கிலோமீட்டர் முதல் 20 கிலோமீட்டர் வேகத்தில் வீசி, மழைப் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.