உக்ரைன் ரஷ்யா போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் டிரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக ரஷ்யா உக்ரைனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள செர்னிஹிவ் நகரின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
செர்னிஹிவ் நகரில் தியேட்டர் மற்றும் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பொதுக் கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 6 வயது சிறுமி உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுவீடன் நாட்டிற்குச் சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த ஏவுகணை தாக்குதல் சம்பவத்திற்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.