உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி அதிக ரன்கள் குவிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அதிக ரன்கள் குவித்து தனது அணிக்கு முக்கிய செல்வாக்கு செலுத்துவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரெக் சேப்பல் உறுதியாக நம்புகிறார். விராட் கோலி சுதந்திரமான மனதுடன் விளையாடினால், ஐசிசி உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடுவார் என்று தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி சுதந்திரமான மனநிலையுடன் அணுகினால், அவர் இந்தியாவுக்கு நிறைய ரன்களை அடிப்பார் என்று தெரிவித்தார்.
பும்ராவைப் பற்றி பேசிய அவர், நான் அவரை பார்த்ததில் இருந்து அவர் ஒரு நல்ல மனதுடன் இருப்பதாகத் தெரிகிறது. காயம் பற்றிய எண்ணங்கள் அவர் மனதில் இருக்கும். அது செயல்திறனைப் பாதிக்கலாம். சிறந்த மனநிலையுடன் அவர் பந்துவீச்சாளராக செயல்பட்டால் இந்தியாவுக்கு மிகவும் சிறப்பாகச் செயல்படுவார்.
ரோஹித் மற்றும் ராகுல் டிராவிட்டிற்கு இது எவ்வளவு கடினமாக இருக்கும் என கேட்டபோது, எதிர்பார்ப்புகள் உயர்ந்த நிலையில் இருக்கும் என்று கூறினார். அவர்கள் மீது பெரும் அழுத்தம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்தார்.
உலகக் கோப்பையில் சுப்மன் கில் அதிக ரன்கள் எடுப்பார் என தான் எதிர்பார்ப்பதாக சேப்பல் கூறினார்.