ஆஸ்திரேலியாவில் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. 19-ஆம் தேதி நடைபெற்ற 3-வது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்வீடன் மோதியது. இதில் ஸ்வீடன் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்துடன் தொடரை நிறைவு செய்தது.
இந்நிலையில், அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, இதேபோல் இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் முதன்முறையாக பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வெற்றி பெறும் அணி ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அணி என்ற பெருமையைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னியில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.