சந்திரயான்-3ன் ரோவர் லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கிய காணொளி காட்சியை இஸ்ரோ தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணி அளவில் விண்களத்தின் லேண்டர் நிலவில் கால் பதித்தது. அதில் இருந்து ரோவர் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கியது. இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தைப் பத்திரமாக நிலவில் தரையிறக்கும் முயற்சி வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்தது.
இந்நிலையில், லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறி நிலவின் மேற்பரப்பில் இறங்கும் காணொளிக் காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதோடு, ரோவர் வெளியேறுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு குறித்த காணொளியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
… … and here is how the Chandrayaan-3 Rover ramped down from the Lander to the Lunar surface. pic.twitter.com/nEU8s1At0W
— ISRO (@isro) August 25, 2023
முன்னதாக, இஸ்ரோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘அனைத்து செயல்பாடுகளும் திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. லேண்டர், ரோவர் கலன்களின் இயக்கம், அதில் உள்ள கருவிகளின் செயல்பாடுகள் சீராக உள்ளன. லேண்டரில் உள்ள ராம்பா, இல்சா, சாஸ்டே ஆகிய ஆய்வுக் கருவிகளும் இயங்கத் தொடங்கின. ரோவர் வாகனம் நிலவில் நல்ல முறையில் நகர்ந்து செல்கிறது. அதேபோல, நிலவின்சுற்றுப்பாதையில் வலம் வரும் உந்துவிசை கலனில் உள்ள ஷேப் எனும் சாதனம் கடந்த 20-ம் தேதி முதல் தனது ஆய்வுப் பணியை செய்துவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.