உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வருகின்ற 27ம் தேதி வரை நடைபெற்ற உள்ளது. இதில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
குரூப் ஏ தகுதி சுற்றில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் தனது முதல் முயற்சிலேயே 88.77 மீட்டர் தூரம் எறிந்து 83:00 என்ற தகுதி சாதனையை முறியடித்தார். உலகில் தலைசிறந்த ஈட்டி எறிதல் வீரராக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்ற நீரஜ், தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது முயற்சியை எடுக்கவில்லை. இதன் மூலம் இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். மேலும், மிகவும் நீண்ட தூரம் வீசியதன் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.
நீரஜ் ஏற்கனவே ஒலிம்பிக் காமன்வெல்த் மற்றும் ஆசியா விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். அது மட்டுமின்றி இவர் டைமென்ட் லீக் வெற்றியாளரும் ஆவார். குறைந்தது 12 வீரர்கள் இந்த இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நீரஜின் நண்பர்களான டிபி மனு மற்றும் கிஷோர் ஜெனா ஆகியோர் குரூப் பி பிரிவில் பங்கேற்கின்றனர்.
27 இந்தியா தடகள வீரர்கள் புடாபெஸ்ட் 23 யில் 15 போட்டிகளில் பங்கேற்கின்றனர். உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.