2023 ஆசியா கோப்பைக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வியாழன் அன்று கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டனர், உடற்பயிற்சிகளை மேற்கொண்ட வீரர்கள் யோ-யோ டெஸ்ட்டில் கலந்து கொள்ளுவார்கள். இந்த செயல்பாடு ஆறு நாள் உடல் கட்டுப்பாடு மற்றும் திறன் மேம்படுத்துதல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் விராட் கோலி இந்த டெஸ்டில் அதிக(17.2) மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். பிசிசிஐ நிர்ணயித்துள்ள அதிகபச்ச மதிப்பெண் 16.5 என்பது குறிப்பிடத்தக்கது.
கோலியை தவிர, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை தலைவர் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் கேஎஸ்சிஏ-ஆலூர் மைதானத்தில் உடல் சோதனையில் பங்கேற்றுள்ளனர். சோதனைகளை விரைவில் முடித்து அறிக்கைகளை பிசிசிஐ க்கு அனுப்பப்படும் என்று சோதனை குழு பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெறும் முகாமில் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா கலந்துக் கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கே.எல்.ராகுல், யோ யோ தேர்வில் இடம் பெறாவிட்டாலும் உடற்தகுதி பயிற்சியில் ராகுல் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்னான ராகுல் இதற்கு முன்பே இருந்த நோயுடன் தொடர்பில்லாத நிக்கில் என்னும் ஒரு நோயால் அவதிப்படுவதாக தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். அதை தொடர்ந்து ராகுல் ஒரு சில நிர்பந்தனையுடன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் ராகுலுக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன் அணியில் உள்ளார் என்றும் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.