கடந்த வாரம் விமான விபத்தில் உயிரிழந்த வாக்னர் குழுமத்தின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினின் இறுதிச் சடங்கு மூடிய அறையினுள் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டது.
வாக்னர் குழுமத் தலைவராக இருந்த யெவ்ஜெனி ப்ரிகோஜினின், இரஷ்ய அரசுக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் உள்நாட்டுப் போரைத் தொடங்கி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி, இரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே நேரிட்ட விமான விபத்தில் யெவ்ஜெனி ப்ரிகோஜின் பலியானர். மேலும் அவருடன் பயணித்த 10 பேரும் பலியானது உறுதி செய்யப்பட்டது.
யெவ்ஜெனி ப்ரிகோஜினின், இரஷ்ய அரசுக்கு எதிராகப் புரட்சி செய்ததால், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், அவருடைய இறுதி சடங்கில் 30 முதல் 40 உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக ஏஜென்ட்ஸ்டிவோ (Agentstvo) தெரிவித்தது.
மேலும், இறுதிச் சடங்கு மூடிய அறையினுள் தனிப்பட்ட முறையில் நடந்ததாகவும், ப்ரிகோஜினின் தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது எனவும் மயான ஊழியர் தெரிவித்தனர்.
இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தனிப்பட்ட சமையல்காரராக இருந்த ப்ரிகோஜினின், ஒருகட்டத்தில் இரஷ்யாவிற்கு எதிராக ஆயுதமேந்தி போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.