அமெரிக்கா ஓபன் டென்னிஸில் நோவக் ஜோகோவிச் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்!
யுஎஸ் ஓபன் சீசனின் நான்காவது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் ஆகும், இது நேற்றிரவு நியூயார்க்கில் தொடங்கியது. நேற்று நடைப்பெற்ற டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 6-0, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் அலெக்ஸாண்ட்ரே முல்லரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன் மூலம் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸை பின்னுக்கு தள்ளிவிட்டு, ஜோகோவிச்சு உலகத்தின் நம்பர் 1 தரவரிசையை மீண்டும் பெற்றுள்ளார்.
குரோஷியாவின் போர்னா கோஜோவும், பொலிவிய வீரர் ஹியூகோ டெலியனை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் காஸ்பர் ரூட் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்கள். இதற்கிடையில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் இன்று மோதவுள்ளனர் . நடப்பு சாம்பியன் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜெர்மனியின் டொமினிக்கை எதிர்த்து நாளை போட்டியிட உள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீராங்கனைக் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் டாட்டியானா ப்ரோசோரோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். போலந்து வீராங்கனை மக்தா லினெட் அலியாக்சாண்ட்ரா, சாஸ்னோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு நுழைந்தார். முன்னதாக அமெரிக்காவின் முக்கிய வீராங்கனை கோகோ காஃப், நடப்பு சாம்பியனான போலந்து இகா ஸ்விடெக் ஆகியோரும் இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர். உக்ரைனின் முன்னாள் வீராங்கனையானா எலினா ஸ்விடோலினா மற்றும் ஜெர்மன் வீராங்கனை அன்னா-லீனா ஃபிரைட்சம் ஆகியோர் இன்று பலப்பரீச்சை நடத்துகின்றனர்.