அமெரிக்க நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு வருகிற செப்டம்பர் 13-ந்தேதி நடைபெற உள்ளது.
செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியல் வளர்ச்சியின் உச்ச நிலை ஆகும். இது நுட்பமான எந்திரங்களை உருவாக்கி மனிதர்களை போல செயல்பட வைக்கும் தொழில்நுட்பம் ஆகும். தற்போது கல்வி, மருத்துவம், தொழில்துறை போன்ற பல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதுகுறித்த விழிப்புணர்வை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறுவதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி ஒரு மாநாட்டை நடத்துகிறது.
இந்த மாநாடு செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறைக்கான அடித்தளத்தை உருவாக்கவும், அது குறித்த விழிப்புணர்வை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எக்ஸ் (டுவிட்டர்) நிறுவன தலைவர் எலான் மஸ்க், மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் தலைமைச்செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.