நாக்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவர்களுக்கான பாடதிட்டத்தில், வரலாற்றுத்துறையின் பயிற்சி வாரியத்தால் பரிந்துரையின் பேரில் பாஜக மற்றும் இராமஜென்ம பூமியின் வரலாறு குறித்த பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறையான அறிவிப்பை பல்கலைக் கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தேசியக் கொள்கை மாற்றத்தின் காரணமாக, நாக்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவர்களுக்கான பாடதிட்டத்தில், பாஜக மற்றும் இராமஜென்ம பூமியின் வரலாறு குறித்த பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த பாடப்பிரிவானது தீபாவளி பண்டிகை முடிந்து, அடுத்து வரும் 4 -வது பருவத்தில் இருந்து இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்ட பாடபிரிவுகளில், பாஜகவின் வளர்ச்சி, மக்களுக்கு செய்து வரும் சேவைகள், பாஜகவின் சித்தாந்தம், அதேபோல, 1980 -ம் ஆண்டு முதல் 2000 -ம் ஆண்டு வரை ராமஜென்ம பூமி செய்த சேவைகள், செயல்பாடுகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.
கடந்த 2019 -ம் ஆண்டு, இந்த பல்கலைக்கழகத்தின் பி.ஏ. இளங்கலை பாடபிரிவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாறு இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.