ஆசிய உலகக்கோப்பை இன்றைய போட்டியில் வங்காளதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பல்லகெலேயில் இன்று நடக்கும் 2-வது லீக்கில் நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசத்தைச் சந்திக்கிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது
முகமது நைம், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹிரிடோய், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகிய வீரர்கள் வங்காளதேசம் அணியில் உள்ளனர்.
பதும் நிஸ்ஸங்கா , திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா , சரித் அசலங்கா , தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா , கசுன் ராஜித, மதீஷ பத்திரன ஆகிய வீரர்கள் இலங்கை அணியில் உள்ளனர்.
வங்காளதேசம் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான வீரர்களாக முஹம்மது வேம்பு மற்றும் தன்சித் ஹசன் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.