பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்!

தி.மு.க. அரசு எதிர்ப்பால் யார் விசாரிப்பது என்பது குறித்து 14-ம் தேதி முடிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 04:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மறு விசாரணைக்கு எடுத்ததற்கு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து 14-ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று கூறி, உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.

கடந்த 1996 முதல் 2001 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்துக் குவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இவ்வழக்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இவ்வழக்கு வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், பொன்முடி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

ஆனால், இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது, இவ்வழக்கு தொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்கும்படி கூறி நோட்டீஸ் பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, அமைச்சர் பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது, “மேற்கண்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம்தான் மாற்றியது. ஆகவே, இவ்வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத்துறையையும் எதிர் மனுதாரராகச் சேர்த்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கவில்லை. அதேபோல, இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் முன்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையின் விளக்கத்தையாவது கேட்டிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.

மேலும், இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம்தான் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. இதை இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. அதோடு, தாமாக முன்வந்து விசாரணக்கு எடுக்கப்படும் வழக்குகளை, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதுதான் நடைமுறை. அவர்தான், அந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்.

ஆனால், இந்த வழக்கில் நடைமுறை வழக்கத்தைத் தாண்டி தலைமை நீதிபதியின் பார்வைக்காக மட்டுமே அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த வழக்கை இந்த நீதிமன்றமோ, நீங்களோ விசாரிக்க அதிகாரம் கிடையாது. எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும்” என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதா? என்பது குறித்து வரும் 14-ம் தேதி முடிவு செய்யப்படும் எனக் கூறி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையைத் தள்ளி வைத்தார்.

Tags: Minister PonmudiAccumulation caseadjournedseptember 14
Share
Tweet
SendShare
Previous Post

பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Next Post

சச்சினுக்குத் தங்கச் சீட்டு !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies