துறைமுகம் மதுரவாயல் பாலம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கும் - நிதின் கட்கரி!
Jul 28, 2026, 08:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துறைமுகம் மதுரவாயல் பாலம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கும் – நிதின் கட்கரி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 9, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, உயர் மட்ட பாலத்தில், ஒரு பகுதி இரட்டை தளமாக அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கும் என்று மத்திய சாலைப்  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 -ம் ஆண்டு, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் இப்பணிகள் தாமதமானது.

கடந்த 2021-ம் ஆண்டு உயர்மட்ட சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகக் கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த உயர் மட்ட பறக்கும் சாலை, இரண்டு அடுக்கு கொண்டதாகும். ரூ.5,721.33 கோடி மதிப்பீட்டில், மேம்பால பணிகள் 4 பகுதிகளாகப் பிரித்து செயல்படுத்தப்படும். மேம்பாலத்தின் மொத்த நீளம் 20.565 கி.மீ. ஆகும்.

இந்த மேம்பாலம் துறைமுக வளாகத்தில் தொடங்கி, கோயம்பேடு வரை செல்கிறது. பின்னர், தற்போதைய பூந்தமல்லி நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படும்.

துறைமுகத்தை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மேலே உள்ள பாலத்தில் செல்லும். சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம் வழியாக மேம்பாலம் செல்லும். இதில், மொத்தம் 13 பகுதிகளில் உள்ளே நுழைவும், வெளியேறவும் முடியும்.

இந்த திட்டத்திற்குச் சுற்றுச்சூழல், இரயில்வே துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, உயர் மட்ட பாலத்தில், ஒரு பகுதி இரட்டை தளமாக அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் முழு வடிவம் பெறும்போது சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே போக்குவரத்துப் பிரச்சினை அடியோடு தீரும்.

Tags: Nitin Gadkari
ShareTweetSendShare
Previous Post

கருடன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்த பொதுமக்கள் – என்ன காரணம் தெரியுமா?

Next Post

பயங்கரவாதத்தை வேரறுக்க உலகத் தலைவர்கள் முடிவு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies