விஸ்வநாதன் ஆனந்த் FIDE பட்டம் வென்ற நாள் இன்று !
May 3, 2026, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஸ்வநாதன் ஆனந்த் FIDE பட்டம் வென்ற நாள் இன்று !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் உலக சதுரங்க செஸ் போட்டியில் முதன்முதலாக பட்டம் வென்ற நாள் இன்று!

‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற சதுரங்க விளையாட்டு வெற்றி வீரர் ஆவார். பதினாறு வயதிலேயே, அதிவேகமாக சதுரங்கக் காய்களை நகர்த்தி “மின்னல் சிறுவன்” என்று போற்றப்பட்டவர்.

இவர், 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “மயிலாடுதுறை” என்ற இடத்தில் ‘விஸ்வநாதன் அய்யருக்கும் ‘சுசீலாவிற்கும்’ மகனாகப் பிறந்தார். இவருக்கு சிவகுமார் என்ற சகோதரனும், அனுராதா என்ற சகோதரியும் உள்ளனர். இவருடைய தந்தை விஸ்வநாதன் தென்னக ரயில்வேயில், ஒரு பொது மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

ஆறு வயதிலிருந்தே, தன்னுடைய தாயாரான சுசீலாவுடன் இணைந்து சதுரங்கம் விளையாடி, கூர்மையான நினைவாற்றலை வளர்த்துக்கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், பள்ளிப்படிப்பை எழும்பூரிலுள்ள ‘டான் போஸ்கோ பள்ளியில்’ முடித்தார். பின்னர், உயர்க்கல்வி பயில ‘லயோலா கல்லூரியில்’ சேர்ந்த அவர், இளங்கலைப் படிப்பில் பி.காம் பட்டம் பெற்றார்.

ஒரு சதுரங்க சங்கத்தின் உறுப்பினராக இருந்து வந்த இவருடைய தாயார் சுசீலா அவர்கள், சிறுவயதிலிருந்தே ஆனந்திற்கு சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொடுத்தார். அதன்பிறகு, ‘டால்’ என்ற சதுரங்க கிளப்பில் சேர்ந்து, மேலும் பயிற்சிப்பெற்ற அவர், தனது பதினான்கு வயதிலேயே தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொண்டு சாம்பியன் பட்டம் வென்றார். பின்னர், பதினைந்து வயதில் அனைத்துலக மாஸ்டர் விருதுதினைப் பெற்ற அவர், 1985 ஆம் ஆண்டு தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொண்டு மீண்டும் ‘சாம்பியன் பட்டம்’ வென்றார்.

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுதே, உலக அளவில் சதுரங்க தர வரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்த விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், ஃபைனல் செமஸ்டர் எழுதுவதற்குள் உலக சாம்பியன் போட்டிக்கானத் தகுதிச் சுற்றுக்காக விளையாட ஆரம்பித்தார். 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்.

2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற உலக சதுரங்க இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் ‘அலெக்ஸீ ஷீரோவை’ வீழ்த்தி ‘உலக சாம்பியன் பட்டம்’ வென்று சாதனைப்படைத்தார்.

இதுவரைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வென்றுள்ள விஸ்வநாதன் அவர்களுக்கு, இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’ மற்றும் ‘அர்ஜுனா விருது’ எனப், பல்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். மேலும், பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் ‘புக் ஆஃப் தி இயர்’, ‘சோவியத் லேண்ட் நேரு விருது’, 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான ‘சதுரங்க ஆஸ்கார் விருதுகள்’ என மேலும் பல விருதுகளை வென்றுள்ளார். உலகளவில் சதுரங்கப் விளையாட்டில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்துவருகிறார் விஸ்வநாத ஆனந்த்.

Tags: viswanadhan anandchess grand master
ShareTweetSendShare
Previous Post

பொறுப்பற்றுச் செயல்படும் ஊழல் திமுக!

Next Post

டெல்லி தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த நாள் இன்று!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies