அண்மையில் சர்வதேச சந்தையில் ஐபோன் 15 சீரிஸ்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் என நான்கு போன்களை அறிமுகம் செய்தது. இந்த போன்களின் விலை இந்தியாவில் அதிகமான விலையும் சில நாடுகளில் குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, இந்தியாவில் விற்பனையாகும் ஐபோன் புரோ மாடல் போன்களுடன் ஒப்பிடும்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாடலின் விலை 20 சதவீதம் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 15 போன் அமீரகத்தில் ரூ.76,817. அதுவே இந்தியாவில் ரூ.79,990. ஐபோன் 15 புரோ போன் இந்தியாவில் ரூ.1,34,900. அமீரகத்தில் இதே மாடலின் விலை ரூ.97,157. அதேபோல் ஐபோன் 15 புரோ மேக்ஸின் விலை ரூ.1,59,900. அமீரகத்தில் இதன் விலை 1,15,237.
இந்தியாவில் ஐபோன் விலை உயர காரணம் என்ன ?
அமீரகத்தில் அதிகளவில் ஐபோன்கள் விற்பனையாகும். அதோடு ஒப்பிடும்போது இந்தியாவில் நடைபெறும் ஐபோன் வர்த்தகத்தின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும், இந்தியாவில் புது மாடல்களை காட்டிலும் பழைய மாடல் (ஜெனரேஷன்) போன்கள் விற்பனை அதிகம் நடைபெறுவதாகவும் ஆப்பிள் விநியோகஸ்தகர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வரிகளும் இதற்கு காரணம் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் சிறப்பு அம்சங்கள்
- 6.1 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 15
- 6.7 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 15 பிளஸ்
- டைனமிக் ஐலேண்ட் இதில் உள்ளது
- பிங்க், மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு என 5 வண்ணங்களில் கிடைக்கும்
- 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- ஏ16 பயோனிக் சிப், சாட்டிலைட் துணையுடன் ரோட்ஸைட் அசிஸ்டன்ட்
2 ஆண்டுகளுக்கு சாட்டிலைட் சேவை இலவசம். - யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஐபோன் 15 போன்களில் இடம் பெற்றுள்ளது
- 5ஜி நெட்வொர்க், செராமிக் ஷீல்ட்
- ஐபோன் 15 போனின் விலை ரூ.79,900, ஐபோன் 15 பிளஸ் போனின் விலை ரூ.89,900 ஐபோன் 15 புரோ, ஐபோன் 5 புரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்
- டைட்டானியம் ஃப்ரேம்
ஏ17 புரோ சிப்
யுஎஸ்பி டைப்-சி போர்ட். யுஎஸ்பி 3
சூப்பர் ஹை ரெஸலுஷன் போட்டோ
ஆக்ஷன் பட்டன்
Wi-Fi 6E
ஸ்பேஷியல் வீடியோ
ஐபோன் 15 புரோ போனின் ஆரம்ப விலை ரூ.1,34,900
ஐபோன் 5 புரோ மேக்ஸ் போனின் விலை ரூ.1,59,900
இந்த போனுடன் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது