சச்சின் டெண்டுல்கரின் சிலை திறப்பு விழா !
Sep 12, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சச்சின் டெண்டுல்கரின் சிலை திறப்பு விழா !

Murugesan M by Murugesan M
Nov 1, 2023, 03:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை இன்று திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்பட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி பிறந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 15,921 ரன்களும், 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் 18,426 ரன்களும் எடுத்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார்.

தற்போது இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வரும் நிலையில், சச்சினை கவுரவிக்கும் வகையில் அவரது முழு உருவச் சிலையை மும்பை வான்கடே மைதானத்தில் நிறுவ மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு அதற்கான பணிகளையும் செய்து வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பணிகள் முடிந்து சச்சினின் முழு உருவச் சிலையானது மும்பை வான்கடே மைதானத்தில் நிறுவப்பட்டது. அதுவும் சச்சின் டெண்டுல்கரின் கேலரி அருகிலேயே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சச்சின் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்த சிலை அவரது 50 ஆண்டுகால வாழ்வை சிறப்பிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை, இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி இந்த மைதானத்தில் நடக்க உள்ள நிலையில், இன்று சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

சச்சின் டெண்டுல்கரின் இந்த சிலையை மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமது நகரைச் சேர்ந்த சிற்பி பிரமோத் காம்ப்ளே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Cricketsachin tendulkar
Share
Tweet
SendShare
Previous Post

விவசாயிகள் மீது திமுகவுக்கு அக்கறையில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு.

Next Post

நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies