இந்திய கலாச்சாரத்தின் பாதுகாப்பான வீடு தென்னிந்தியா : ராஜ்நாத்சிங்
இந்தியாவின் கலாச்சார கோட்டை தென்னிந்தியா என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய உற்பத்தி கண்காட்சி-2023 இன்றும், நாளையும் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, டெல்லி அரசியல் தலைநகரம் என்றால், பெங்களூரு நாட்டின் தொழில்நுட்ப தலைநகரம் என்று கூறினார்.
புவியியல் அமைப்பு காரணமாக, தென்னிந்தியா தொலைவில் உள்ளதாகவும், அதனால் .வட இந்தியா நேரடியாக படையெடுப்பாளர்களை எதிர்கொண்டதாகவும் கூறினார்.
ஆக்கிரமிப்பாளர்கள் வட இந்தியாவில் நமது கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிக்க முயன்றதாகவும், ஆனால் தென்னிந்தியா ஆக்கிரமிப்பாளர்களால் பாதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அதன் விளைவாக, தென்னிந்தியாவில் இந்திய கலாச்சாரம் மிகவும் துடிப்பானதாக இருப்பதைக் காணலாம் என்றும், தேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதாகவும் கூறினார்.
எனவே தென்னிந்தியாவை இந்தியாவின் ‘கலாச்சார கோட்டை’ என்று அழைத்தால் மிகையாகாது என்றும், இந்திய கலாச்சாரத்தின் பாதுகாப்பான வீடு தென்னிந்தியா என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.