ஸ்பாஞ்ச் குண்டுகள்: இஸ்ரேல் இராணுவம் அதிரடி!
Jul 29, 2026, 11:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்பாஞ்ச் குண்டுகள்: இஸ்ரேல் இராணுவம் அதிரடி!

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசா போரில் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ள, ஹமாஸின் சுரங்கங்களை அளிக்க ஸ்பாஞ்ச் குண்டுகளைப் பயன்படுத்த இஸ்ரேல் இராணுவம் முடிவு செய்துள்ளது.

கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு, ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுத்துவரும் இஸ்ரேல், உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது.

ஆனால், காசாவுக்குள் இஸ்ரேல் இராணுவம் முழு அளவில் இன்னும் நுழையாததற்கான காரணங்களில் முக்கியமானது, ஹமாஸ் அமைத்துள்ள சுரங்கங்கள். காசாவில் ஹமாஸ் உருவாக்கி வைத்துள்ள, சுரங்கங்களில் இருந்து தீவிரவாதிகள் வெளியே வந்து எதிர்பாராத கொரில்லா தாக்குதல் நடத்தினால், தங்கள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும் என்பதே இஸ்ரேல் இராணுவத்தின் தயக்கத்துக்குக் காரணம்.

கடந்த 2021-ஆம் ஆண்டு 96 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஹமாஸின் சுரங்கங்களை அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், தங்கள் வசம் 483 கிலோ மீட்டர் அளவுக்குச் சுரங்கங்கள் இருப்பதாகவும், இஸ்ரேல் அழித்தது 5 சதவீதம் கூட இல்லை என்று கொக்கரித்தது, ஹமாஸ்.

ஹமாஸின் சுரங்கப் பாதைகளை அழிக்க, இஸ்ரேல் இராணுவம் ஸ்பாஞ்ச் குண்டுகள் எனப்படும் நவீன இரசாயன ஆயுதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

ஸ்பாஞ்ச் குண்டுகள் என்பவை வெடிபொருட்கள் அல்ல. இரு வகை இரசாயனங்கள் அடங்கிய சிறு பிளாஸ்டிக் கேன் வடிவில் இருக்கும் ஸ்பாஞ்ச் குண்டுகளை வீசியதும், அதில் இருந்து பொங்கி வரும் இரசாயன நுரை, மிகச் சில விநாடிகளுக்குள் பெரியளவுக்குப் பரவி, அந்த இடத்தையே நிரப்பி கெட்டியாகி விடும். இவற்றைச் சுரங்கத்தின் வாயில், அல்லது உள்ள பதுங்கு குழிகளில் வீசினால், அதன் வழியாக ஹமாஸ் தீவிரவாதிகள் வெளியே வந்து தாக்குதல் நடத்த முடியாது.

Tags: IsraelIsrael army force
ShareTweetSendShare
Previous Post

ஒளிப்பதிவாளர் போல் வேஷம் போட்ட சூரியகுமார் யாதவ் !

Next Post

இந்தியாவின் கலாச்சார கோட்டை தென்னிந்தியா : அமைச்சர் ராஜ்நாத்சிங் புகழாரம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies