காங்கிரசும், வளர்ச்சியும் ஒன்றாக இருக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கரில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கான்கேரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதன் தலைவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக உழைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்க மாநில மக்களும், பாஜகவும் இணைந்து செயல்பட்டதாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைத்ததாகவும் தெரிவித்தார்.
இந்தத் தேர்தல் ஒரு எம்.எல்.ஏ., அல்லது முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக மட்டும் அல்ல, இது உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல்,என்றும் மோடி குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வுக்கு பெரும் ஆதரவு இருப்பதை கான்கேரில் பார்க்க முடிவதாகவும், சத்தீஸ்கரின் அடையாளத்தை வலுப்படுத்துவதே பாஜகவின் நோக்கம் என்றும் பிரதமர் கூறினார்.
பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளை பாதுகாப்பதே பாஜகவின் இலக்கு என்றும், சத்தீஸ்கரை நாட்டின் முதல் மாநில வரிசையில் கொண்டு வருவோம் என்றும் மோடி குறிப்பிட்டார். காங்கிரசும் வளர்ச்சியும் ஒன்றாக இருக்க முடியாது என்று பிரதமர் தெரிவித்தார்.