ரூ. 2000 நோட்டுகள்: தபால் மூலமாக மாற்றலாம்!
Aug 8, 2026, 12:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ. 2000 நோட்டுகள்: தபால் மூலமாக மாற்றலாம்!

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 02:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரூபாய் 2000 நோட்டுகளை, காப்பீடு தபால் மூலமாக, ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பலாம். அதற்கான தொகை, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, 2000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக, ரிசர்வ் வங்கி, கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் அந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது கணக்கில் செலுத்தலாம் என, தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இது அக்டோபர் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை புழக்கத்தில் இருந்த, 97 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அக்டோபர் 8-ஆம் தேதியில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Withdrawal of ₹2000 Denomination Banknotes – Statushttps://t.co/m3lgustfL3

— ReserveBankOfIndia (@RBI) November 1, 2023

இதற்கிடையே, தொலைதூரத்தில் உள்ளவர்கள், ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்குச் செல்வதற்குச் சிரமமாக இருப்பதாகவும், மாற்று வழி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து, புதிய வசதிகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், தங்களிடம் உள்ள நோட்டுகளை, ‘இன்சூர்டு போஸ்ட்’ எனப்படும் காப்பீட்டுத் தபால் வாயிலாக, ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பலாம். அதற்கான தொகை, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அதேபோல், டி.எல்.ஆர்., எனப்படும், ‘டிரிபிள் லாக் ரெசப்டபிள்’ எனப்படும் விண்ணப்பத்தைப் பெற்றும், உறையில் வைத்து, 2000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் உள்ள பெட்டிகளில் செலுத்தலாம். அந்தத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த இரண்டு முறைகளும் மிகவும் பாதுகாப்பானவை, அலைச்சல் இல்லாதவை என்று கூறப்பட்டுள்ளது.

Tags: POST OFFICEreservebankofindiarbigoverner2000
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் எங்குஎங்கு ஐ.டி. ரெய்டு? – முழு விவரம்!

Next Post

அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி !

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies