சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்!
Sep 23, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்!

அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் பூனவல்லா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 07:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதுதான் என்று அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் பூனவல்லா கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதேசயம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பா.ஜ.க.விடம் ஆட்சியை பறிகொடுத்திருக்கிறது.

இந்த நிலையில், காங்கிரஸின் தோல்விக்கு சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதுதான் மிக முக்கியக் காரணம் என்று அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் பூனவல்லா கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஏன் தோல்வியடைந்தது என்பதை காங்கிரஸ் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

இந்தத் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியது. அதேபோல, ஓ.பி.சி. மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்துப் பேசியது மற்றொரு காரணமாகும். ஏனெனில், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இது ஒரு காரணியாகவே இல்லை.

மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, சிவராஜ் சிங் சௌஹான் ஒரு ஓ.பி.சி. முதல்வர். அதேபோல, முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் மற்றும் உமாபாரதி ஆகியோரும் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்கிற நம்பிக்கையில் இருந்த காங்கிரஸுக்கு இவை இரண்டும் கடும் போட்டியை ஏற்படுத்தி விட்டன.

78 வயதான கமல்நாத் மற்றும் 76 வயதான திக்விஜய் சிங் ஆகியோரிடம் முழுமையான கட்டுப்பாட்டை வழங்கிய காங்கிரஸிடம், பா.ஜ.க.வின் சமூக பொறியியல் மற்றும் சமூக திட்ட சூத்திரத்திற்கு பதில் இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், மத்தியப் பிரதேசத் தேர்தலில் பா.ஜ.க. தனது முழு பலத்தையும் ஈடுபடுத்தியதோடு, மத்திய அமைச்சர்கள், மக்களவை எம்.பி.க்களையும் களத்தில் இறக்கி விட்டது.

அதேசமயம், காங்கிரஸ் கொடுத்த 11 உத்தரவாதங்களில் ஏராளமான இலவசங்கள் அடங்கி இருந்தன. ஆனால், இதை வாக்காளர்கள் நம்பவில்லை. அதோடு, பா.ஜ.க. ஏற்கனவே பல சமூகத் திட்டங்களின் பலனை மக்களுக்கு வழங்கியது. குறிப்பாக, லட்லி பெஹ்னா திட்டம் பெண் வாக்காளர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது” என்றார்.

Tags: CongressSanadan dharmaabusingDefeat
Share
Tweet
SendShare
Previous Post

டேவிட் வார்னருக்கு ஷாகின் அப்ரிடி சவால்!

Next Post

இரு முதல்வர் வேட்பாளர்களை தோற்கடித்த பாஜக வேட்பாளர்!

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies