தெலுங்கானா மாநிலம் காமரெட்டி தொகுதியில் போட்டிட்ட பாஜக வேட்பாளர் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ரேவந்த் ரெட்டியை தோற்கடித்தார்.
காங்கிரஸ் தரப்பு முதலமைச்சர் வேட்பாளரான ரேவந்த் ரெட்டியுடன் மோத வேண்டும் என்பதற்காக காமரெட்டி தொகுதியில் சந்திரசேகர ராவ் போட்டியிட்டார். அதேபோல கோடங்கல் (Kodangal) தொகுதியில் களமிறங்கிய ரேவந்த் ரெட்டியும், கேசிஆர் உடன் மோத வேண்டும் என்பதற்காக காமரெட்டி தொகுதியில் போட்டியிட்டார்.
இதனையடுத்து காமரெட்டி தொகுதி விஜபி அந்தஸ்து பெற்றது. அனைத்து கட்சிகளின் கவனமும் அங்கு திரும்பியது. கேசிஆர் அல்லது ரேமந்த் ரெட்டி இருவரில் ஒருவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், ரேவந்த் ரெட்டியை மூன்றாவது இடத்திற்கும், தெலங்கானா முதலமைச்சர் கேசிஆரை இரண்டாவது இடத்திற்கும் தள்ளிவிட்டு பாஜக வேட்பாளர் கடிபல்லி வெங்கட ரமண ரெட்டி (KATIPALLY VENKATA RAMANA REDDY) வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன.