மோசடி கடன் செயலிகள்: சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
Jul 28, 2026, 09:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோசடி கடன் செயலிகள்: சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 28, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோசடி கடன் செயலிகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இந்தியாவில் தற்போது ஏராளமான கடன் செயலிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது. இதுபோன்ற கடன் செயலிகள் அதிக அளவில் வட்டி வசூலிப்பது, கடன் பெறுபவர்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களைத் திருடி அவற்றை ஆபாசமாக சித்தரிப்பது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன.

மேலும், செல்போனில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் எண்களை திருடி, கடன் வாங்கியவர்களைப் பற்றி தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றன. இதனால், இவ்வகை செயலிகளில் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.

தவிர, கடன் செயலிகள் என்ற பெயரில் தகவல் திருட்டு, வங்கி விவரங்கள் திருட்டு போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. எனவே, இதுபோன்ற மோசடி செயலிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு சமீபத்தில் சமூக வலைத்தள நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி விவாதித்தது. அப்போது, சமூக வலைத்தளங்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில்தான், மோசடி கடன் செயலிகள் குறித்த விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய வழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சந்திரசேகர் கூறுகையில், “மோசடி கடன் செயலிகள் தொடா்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஏனெனில், அவை இணையத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது, மோசடி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இணையம் என்பது பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்த சேவைகள் மட்டும் கிடைக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் விதிகளில் இணையத்தில் வெளியிட தடை செய்யப்பட்ட 11 விஷயங்கள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளது” என்று கூறினார்.

Tags: central governmentMinisterRajeev Chandra sekarFraudulent Loan AppCracking down
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் புதிதாக 702 பேருக்கு கொரோனா உறுதி!

Next Post

கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies