இத்தனை ஆண்டுகளாக தருமபுரி மாவட்டத்தில் ஜாதி அரசியல் நிலவுகிறது! -அண்ணாமலை
Sep 12, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இத்தனை ஆண்டுகளாக தருமபுரி மாவட்டத்தில் ஜாதி அரசியல் நிலவுகிறது! -அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 02:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தருமபுரி மாவட்டத்தில் இத்தனை ஆண்டுகளாக ஜாதி அரசியல் செய்து, தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக வைத்திருக்கிறார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை அரூர் சட்டமன்றத் தொகுதியில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற ஆர்வத்தோடு நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 

தமிழகத்திற்கும் ராமருக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லும் அரசியல்வாதிகள் இங்கே தீர்த்தமலை கோவிலுக்கு வர வேண்டும். ராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார்.

அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேஸ்வரம், மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்தகிரி. ராமபிரானை வேண்டிக்கொண்டு இங்குள்ள தீர்த்தக் குளத்தில் ராமஜெயம் என்று சொல்லி நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வார்கள்.

அயோத்தி ராமர் கோவிலில் ஜனவரி 22 அன்று நடக்கவிருக்கும் கும்பாபிஷேகம், ராமர் வழிபட்ட அரூர் கோவிலுக்கும் நடப்பதாகத்தான் பொருள்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கடந்த ஒன்பதாண்டு கால ஆட்சி, ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்துக்காகக் கொண்டு வந்த நலத்திட்டங்கள் ஏராளம். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 31,336 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 1,21,410 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,32,117 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,01,522 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 87,523 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,84,039 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் என 15 தவணைகளில் ரூ.30,000, தர்மபுரி மாவட்டத்திற்கு 3,010 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என பல்வேறு நலத்திட்டங்கள் லட்சக்கணக்கான மக்களை எட்டியுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு, பாரதப் பிரதமராக மோடி அவர்கள் பொறுப்பேற்றபோது, நமது நாட்டில் தனிநபர் சராசரி வருமானம் ரூ.86,000 ஆக இருந்தது. தற்போது, ரூ.1,96,000 ஆக உயர்ந்துள்ளது. உலகில் 11 ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த நமது நாடு, தற்போது உலகில் 5 ஆவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறியிருக்கிறது.

உலக அரங்கில் நமது நாட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி, விவசாயிகளை, இளைஞர்களை, பெண்களை, ஏழை எளிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ரூபாய் கூட லஞ்சம், ஊழல் இல்லாத நல்லாட்சி நடைபெறுகிறது.

ஆனால், தருமபுரி மாவட்டத்தில் இத்தனை ஆண்டுகளாக ஜாதி அரசியல் செய்து, தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக வைத்திருக்கிறார்கள்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தருமபுரி மக்கள் வேலைவாய்ப்புக்காக நாடு முழுவதும் பல இடங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால், தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் இல்லை.
பின்தங்கிய மாநிலம் என்று திமுகவினர் கூறும் பீகாரின் பல மாவட்டங்களை விட, தருமபுரி பின்தங்கி உள்ளது.

ஆனால், இது குறித்த எந்தக் கவலையும் இன்றி, வட மாநில மக்களை அவதூறாகப் பேசி, மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார். தருமபுரி மக்களை தேசிய அளவில் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்த தருமபுரி மக்கள், பெரும் அரசியல் மாற்றத்திற்குத் தயாராகி விட்டார்கள் என்பது, கூடியிருக்கும் மக்களின் எழுச்சி ஆரவாரத்தில் உணர முடிகிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த வாக்களிக்க வேண்டும். மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: annamalai en mann en makkal rally
Share
Tweet
SendShare
Previous Post

அரசு பங்களாவை காலி செய்யும்படி திரிணாமுல் எம்.பி.க்கு நோட்டீஸ்!

Next Post

‘ஸ்வச் மந்திர்’ பிரச்சாரம்: தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies