குஜராத்தில் ஒரு கட்டிடத்தில் 115 அடி உயர ராமர் பேனர்!
Sep 10, 2026, 03:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் ஒரு கட்டிடத்தில் 115 அடி உயர ராமர் பேனர்!

Murugesan M by Murugesan M
Jan 12, 2024, 01:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சூரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் சுமார் 115 அடி உயர ராமரின் பேனர் தொங்கவிடப்பட்டுளள்து, அந்த பேனரில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் ராமர் படம் இடம் பெற்றுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நாட்டு மக்கள் காத்திருகின்றனர். இந்நிலையில், நாட்டின் பிற பகுதிகளிலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சூரத் நகரில் ராமரை வரவேற்க கட்டிடங்களில் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. சூரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் சுமார் 115 அடி உயர ராமரின் பேனர் தொங்கவிடப்பட்டுள்ளது.  அந்த பேனரில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் ராமர் படம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பேனர் தயாரிப்பாளர் பிரவீன் குப்தா கூறுகையில், “பல கட்டிடங்களில் இதுபோன்ற பேனர்களை தொங்க விடுகிறோம்.  அனைவரின் பங்களிப்பால் இது நடக்கிறது. ராமர் வந்துவிட்டது போல் உணர்கிறேன்” என்றார்.

“ஜனவரி 21 அன்று சோபா யாத்திரை இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் பதினொரு விளக்குகள் எரியப் போகிறது. எங்கள் கட்டிடத்தில் விளக்குகள் கொண்டுவரும் திட்டம் உள்ளது. மொத்தம் 132 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, அவை அனைத்திலும் வசிக்கும் மக்கள் உற்சாகமாக உள்ளனர். ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எங்கும் எதிரொலிக்க வேண்டும்.

பேனர் தயாரிப்பாளரின் தனித்துவத்தை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.

“சூரத்தில் இதுவரை இதுபோன்ற பேனர்கள் எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்த பேனரில் உள்ள தெளிவு தனித்துவமானது” என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.

ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மக்களின் பங்களிப்புகள் வெளியே தெரிகிறது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு 50 கிலோ எடையுள்ள கையால் செய்யப்பட்ட பூட்டை ஹாரிசன் லாக்ஸ் தயாரித்துள்ளது.

எட்டா மாவட்டத்தின் ஜலேசர் நகர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு ‘அஷ்டதாது’ (எட்டு உலோகங்கள்) செய்யப்பட்ட 2400 கிலோ எடையுள்ள மணியை வழங்கியுள்ளார்.

ஒரே வார்ப்பில் வடிவமைக்கப்பட்ட இந்த மணியின் சத்தம் 10 கிலோமீட்டர் வரை கேட்கும் என்றும், அதன் தயாரிப்பு செலவு தோராயமாக 25 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கூடுதலாக, 51 கிலோகிராம் எடையுள்ள மேலும் ஏழு மணிகளும் வழங்கப்பட்டன.

ஜனவரி 4 ஆம் தேதி, ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிற்பி ஒருவரால் தயாரிக்கப்பட்ட 51 அங்குல உயரமுள்ள ராம் லல்லாவின் சிலை உத்தரபிரதேசத்தின் அயோத்தியை அடைந்ததுள்ளது.

Tags: ayodhya ramar templeayodhya ramar temple function
Share
Tweet
SendShare
Previous Post

நேபாளத்தை சேர்ந்த 21,000 பூசாரிகள் பங்கேற்கும் மகா யாகம்!

Next Post

ஜனவரி 31-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்!

Related News

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies