கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலத்திட்டம், வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. புதிய சாலைகள், பாலங்கள், ரயில்வே பாதைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 9 ஆண்டுகளில், 53,000 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன.நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகம் 2014-15ல் 12.1 கிமீ இருந்தது.
இது 2022-23ல் 37 கி.மீ வரை உயர்ந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 27 கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயில்களின் நீளம் 2014 இல் 248 கிலோமீட்டரிலிருந்து 2023 இல் 860 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலம் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஜம்முவில் இருந்து பாரமுல்லா வரையிலான பாதையுடன் இந்த பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடல் சுரங்கப்பாதை 10,000 அடிக்கு மேல் உள்ள உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை மத்திய அரசின் மற்றொரு மைல்கல். ஆசியாவின் மிக நீளமான ஜோஜிலா சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது . லடாக்கில் உள்ள பனிப்பாறைகள் வழியாக உலகின் முதல் மோட்டார் சாலை ஹிமாங்க் மற்றொரு சாதனை என்றே கூறலாம்.
போகிபீல் பாலம் ஆசியாவின் 2வது நீளமான இரயில்-சாலைப் பாலமாகும், மேலும் நிலநடுக்கங்களைத் தாங்கக்கூடிய முழுவதுமாக வெல்டிங் செய்யப்பட்ட எஃகு-கான்கிரீட் ஆதரவுக் கற்றைகளைக் கொண்ட இந்தியாவின் முதல் பாலம் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. சாலை போக்குவரத்து இந்தியாவின் மொத்த பயணிகள் போக்குவரத்தில் 87% ஆகும்.
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்து அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளளது. 2014இல் மொத்த உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 60 மில்லியன் ஆக இருந்தது.இது 2020ஆம் ஆண்டில் 143 மில்லியனாக உயர்ந்துள்ளது.அதே காலக்கட்டத்தில் சர்வதேச பயணிகள் எண்ணிக்கை 43 மில்லியனில் இருந்து 64 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.