டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ரவிச்சந்திர அஸ்வின்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியானது ராஞ்சியில் நடைபெறுகிறது .
இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியானது இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பட்டிகை தேர்வு செய்துள்ளது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.
இதில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.