சத்தீஸ்கரில் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!
Sep 12, 2026, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 03:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய அனல்மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் மின் திட்டம் தொகுப்பு-1-ஐ பிரதமர்  மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய அனல்மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் தொகுப்பு-2-க்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

‘வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த சத்தீஸ்கர்’ நிகழ்ச்சியில் நாளை மதியம் 12:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.34,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். சாலைகள், ரயில்வே, நிலக்கரி, மின்சாரம், சூரிய சக்தி உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் திட்டங்களாகும்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் தேசிய அனல் மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் மின் திட்டம் தொகுப்பு-1 (2×800 மெகாவாட்) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் தேசிய அனல் மின் கழகத்தின் லாரா சூப்பர் அனல் மின் கழகத்தின் தொகுப்பு-2 (2×800 மெகாவாட்) திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

தொகுப்பு -1 சுமார் ரூ.15,800 கோடி முதலீட்டில் கட்டப்பட்டாலும், திட்டத்தின் தொகுப்பு -2 தொகுப்பு-1 வளாகத்தில் இருக்கக்கூடிய நிலத்தில் கட்டப்படும். இதனால் விரிவாக்கத்திற்கு கூடுதல் நிலம் தேவையில்லை. மேலும் ரூ.15,530 கோடி முதலீடு தேவைப்படுகிறது.

தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தின் ரூ.600 கோடிக்கும் அதிகமான மொத்த செலவில் கட்டப்பட்ட மூன்று இணைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

நிலக்கரியை விரைவாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், இயந்திரங்கள் மூலமாகவும் திறம்பட வெளிக்கொணர இவை உதவும். இந்த திட்டங்களில் தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தின் டிப்கா பகுதியில் நிலக்கரி ஆலையை கையாளுதல், தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தின் ராய்கர் பகுதியில் உள்ள சால் மற்றும் பரூட் நிலக்கரி ஆலை கையாளுதல் ஆகியவை அடங்கும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ராஜ்நந்த்கானில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சூரிய ஒளி மின் இயக்கத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டம் ஆண்டுதோறும் 243.53 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். 25 ஆண்டுகளில் சுமார் 4.87 மில்லியன் டன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும். இது அதே காலகட்டத்தில் சுமார் 8.86 மில்லியன் மரங்களால்  ஏற்படும் கார்பன் உமிழ்வுக்கு சமம்.

இப்பகுதியில் ரயில் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், சுமார் ரூ.300 கோடி செலவில் கட்டப்படவுள்ள பிலாஸ்பூர் – உஸ்லாப்பூர் மேம்பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது கட்னி நோக்கிச் செல்லும் பிலாஸ்பூரில் நிலக்கரி போக்குவரத்தால் ஏற்படும் நெரிசலை குறைக்கும். பிலாயில் 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலை 49-ல் 55.65 கிலோமீட்டர் நீளமுள்ள பிரிவை புனரமைப்பு, தரம் உயர்த்தும் பணிகளை இருவழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பிலாஸ்பூர், ராய்கர் ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கு இடையேயான  போக்குவரத்து தொடர்பை மேம்படுத்த இந்தத் திட்டம் உதவும். தேசிய நெடுஞ்சாலை எண் 130-ல் 52.40 கிலோமீட்டர் நீளமுள்ள பிரிவை புனரமைத்து தரம் உயர்த்தும் பணிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்தத் திட்டம் அம்பிகாபூர் நகரத்தை ராய்ப்பூர் மற்றும் கோர்பா நகரங்களுடன்  இணைப்பதை மேம்படுத்தவும், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

ஏழைகளை மறந்து குடும்பத்திற்காக பணியாற்றும் இண்டி கூட்டணி தலைவர்கள் : பிரதமர் மோடி

Next Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : சாதனை படைத்த அஸ்வின்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies