கடந்த 9 ஆண்டுகளில் ஆயுஷ் உற்பத்தித் துறை 8 மடங்கு வளர்ந்துள்ளது!
Sep 10, 2026, 08:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த 9 ஆண்டுகளில் ஆயுஷ் உற்பத்தித் துறை 8 மடங்கு வளர்ந்துள்ளது!

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 07:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்புடன் ஆயுஷ் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

புதுதில்லியில் இன்று ஆயுஷ் அமைச்சகம், வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்புடன் (ஆர்ஐஎஸ்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனமான ஆர்ஐஎஸ் உடன் கல்வி ஒத்துழைப்பு மற்றும் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும். ஆயுஷ் அமைச்சகம் சார்பாக அந்த அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடேச்சாவும் ஆர்ஐஎஸ் சார்பாக அதன் தலைமை இயக்குநர் பேராசிரியர் சச்சின் துர்வேதியும் இந்த ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இந்தியப் பாரம்பரிய மருத்துவத் துறையில் திறன் மேம்பாடு, தேசிய, மண்டல மற்றும் சர்வதேச அளவில் ஆராய்ச்சி, கொள்கை கலந்துரையாடல் மற்றும் வெளியீடுகளில் ஒத்துழைப்பு போன்றவை வலுப்படும். ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஆர்ஐஎஸ் இடையேயான கல்வி ஒத்துழைப்பில் இந்திய பாரம்பரிய மருத்துவம் குறித்த அமைப்பின் தொடர்ச்சியும் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியின்போது ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடேச்சா பேசுகையில், ஆயுஷ் அமைச்சகம் ஆர்ஐஎஸ் உடன்  இணைந்த பணிகளைத் தொடங்கியுள்ளது என்றும், கொள்கை ஆவணங்கள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றை ஆர்ஐஎஸ் வழங்கியுள்ளது என்றும் கூறினார்.

கடந்த 9 ஆண்டுகளில் ஆயுஷ் உற்பத்தித் துறை 8 மடங்கு வளர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆயுஷ் சேவைத் துறை குறித்த அறிக்கைகளை ஆர்ஐஎஸ் குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிடும் என்றும் வைத்யா ராஜேஷ் கோடேச்சா தெரிவித்தார்.

ஆர்ஐஎஸ் தலைமை இயக்குநர் பேராசிரியர் சச்சின் துர்வேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். சர்வதேச வர்த்தகத்தில் சந்தை மதிப்பீடுகள், ஒழுங்குமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கிய மற்றும் பரந்த கண்ணோட்டம் தொடர்ந்து தேவைப்படுகிறது என்றும் அதை நோக்கி தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags: AYUSH manufacturing industry has grown 8 times in last 9 years!
Share
Tweet
SendShare
Previous Post

ஆட்சியில் இல்லாவிட்டாலும் பாஜகவின் இதயத்தில் தமிழகம் உள்ளது : பிரதமர் மோடி

Next Post

கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 -வது முறையாக சம்மன்!

Related News

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி தீவிரம்!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

பதிப்புரிமை வழக்கு – இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா – தவெக தலைமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்!

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies