அமெரிக்காவின் வடக்கு பிலடெல்பியா புறநகர் பகுதியான லெவிட்டவுனில் உள்ள ஒரு வீட்டுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த வாலிபர், அங்கிருந்த 2 பெண்கள் மற்றும் 1 வயது சிறுமியை சுட்டுக்கொன்றார்.
அமெரிக்காவின் வடக்கு பிலடெல்பியா புறநகர் பகுதியான லெவிட்டவுனில் உள்ள ஒரு வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றுள்ளார்.
அங்கு ஒரு 55 வயதான பெண் மற்றும் 13 வயதுடைய சிறுமி இருந்துள்ளனர். அவர்கள் இருவரையும் அந்த வாலிபர் தான் எடுத்துச் சென்றார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த அந்த நபர் வெளிய இருந்த ஒரு பெண்ணை மேலும் சுட்டுக் கொன்றார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்தது வந்த போலீசார், தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வாலிபர் நியூ ஜெர்சி நகரில் பதுங்கியிருந்து தெரியவந்தது.
பின்னர் நியூ ஜெர்சி நகரில் பதுங்கியிருந்த அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதன் விசாரணையில் அவர் 26 வயதுடைய ஆண்ட்ரே கார்டன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் சுட்டுக்கொன்றவர்கள் யார் என்று விசாரிக்கப்பட்டதில் அவர் தனது வளர்ப்புத் தாய் மற்றும் சகோதரியை சுட்டுக் கொன்றதும் தெரிய வந்தது.
டிராண்டன் பகுதியில் கார் ஒன்றை திருடிய ஆண்ட்ரே கார்டன், அதில் லெவிட்டவுன் பகுதிக்கு சென்று தனது உறவினர்களை சுட்டுக் கொன்றுள்ளார். இது தொடர்பாக அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.