ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் : அமித் ஷா உறுதி!
Sep 19, 2026, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் : அமித் ஷா உறுதி!

Murugesan M by Murugesan M
Mar 27, 2024, 11:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில்  செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது : பிரதமர் மோடியின் வாக்குறுதிப்படி ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவோம். இந்த ஜனநாயகம் மூன்று குடும்பங்களுக்குள் மட்டும் நின்றுவிடாது, மக்கள் ஜனநாயகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

நீண்டகாலமாக இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் வம்ச அரசியலின்  செல்வாக்கிலிருந்து காஷ்மீரை விடுவிப்பதே பாஜகவின் நோக்கம். காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி  மற்றும் பிடிபி ஆகிய மூன்று வம்சக் கட்சிகள் அடிமட்ட அளவில் ஜனநாயகம் பரவுவதற்குத் தொடர்ந்து தடையாக இருக்கிறது. இந்த முறை அந்த 3 கட்சிகளுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அமித் ஷா கூறினார்.

முதன்முறையாக ஜம்மு காஷ்மீரின் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு மோடி அரசு அளித்துள்ளது. பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

பிரிவு 370-ன் நிழலின் கீழ், ஒரு பிரிவினைவாத சித்தாந்தம் வேரூன்றி, ஜம்மு- காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு இட்டுச் சென்றது. இந்தச் சூழலை பாகிஸ்தான்  பயன்படுத்திக் கொண்டது. கடந்த நான்கு தசாப்தங்களில் 40,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இன்று ஜம்மு காஷ்மீர் முன்னேறி வருகிறது, பயங்கரவாதம் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் முழுவதும் ஒரு புதிய வகையான வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களின் பணம் மக்களைச் சென்றடைகிறது என்றும் அமித் ஷா கூறினார்.

Tags: jammu kashmiramith shahjammu kashmir assembely election
Share
Tweet
SendShare
Previous Post

வேட்பு மனு தாக்கல் செய்தார் அண்ணாமலை!

Next Post

பாஜகவில் இணைந்த திமுக, அதிமுக நிர்வாகிகள்!

Related News

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies